கடந்த தி.மு.க. ஆட்சியில் அனுபவித்த மின்வெட்டில் இருந்து , ஆட்சி மாற்றத் துக்குப்பிறகு , புதிய ஆட்சியில் , முதல்வர் ஜெயலலிதா வின் நிர்வாகத்திறமையால் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால் நிலைமை இன்னும் மோசமானதுதான் கண்ட பலன். இந்த நிலைக்கு முழுக்காரணம் இவர் இல்லை என்றாலும் , மின்வெட்டிலிருந்து நிவாரணம் அளிக்க என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது நமக்குத்தெரியாது. மின்தேவை குறைவாக உள்ள இந்த நேரத்திலேயே புறநகர் பகுதிகளில் 5 மணி நேரத்துக்குமேல் மின்வெட்டு உள்ளது. இன்னும் இரண்டு மா தங்களில் கோடை பிறந்துவிடும் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கின்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்குள் மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அது எவ்வாறு சாத்தியம் என்பதுதான் தெரியவில்லை. ஏனென்றால் இவர் மனது வைத்தல் உடனடியாக சாத்திய மாகக்கூடிய கூடங்குளம் அணுமின்நிலைய உற்பத்தி , மத்திய அரசுடனான பிணக்கு காரணமாக அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு , அவருக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பலரும் பலவிதமாக எடுத்துச்சொல்லியும் வாளாவிருப்பது முதல்வருக்கு அழகல்ல. 925 MV விரைவில் கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருந்தும்,அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனக்கு சம்பந்தமே இல்லாததுபோல இருப்பது சரியல்ல. இவர் தனது ஈகோ வை ஒதுக்கிவைத்துவிட்டு விரைவில் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கிவரும் உதயகுமார் போன்றவார்களின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment